அசிங்கமாக நடப்பதா? சக நடிகருக்கு ‘பளார்’ அறை! -ஜில்லா நடிகையின் பரபரப்பு VIDEO

இந்தியச் சினிமா
Typography

 மும்பை, ஆக.2– படப்பிடிப்பு நடந்த இடத்தில் தன்னிடம் அசிங்கமாக நடந்துக் கொண்ட சக நடிகரை ஜில்லா பட நடன நடிகை ஸ்கார்லட் வில்சன் 'பளார்' என்று கன்னத்தில் அறைந்துள்ளார். 

இங்கிலாந்தைச் சேர்ந்த மாடல் அழகியான ஸ்கார்லட் வில்சன், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் 'குத்து' பாடல்களுக்கு நடனமாடி வருகிறார்.  

இவர் ஜில்லா படத்தில் ஜிங்கின மணி.., ஜிங்கின மணி பாடலுக்கு நடனமாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று பாகுபலி -1 படத்திலும் இவர் நடனமாடியுள்ளார்.

'ஹன்சா-ஏக் சன்யோக்' என்ற பாலிவுட் படத்தில் ஸ்கார்லட் குத்துப் பாடலுக்கு ஆடுகிறார். இந்தப் படப்பிடிப்பின் போது நடிகர் உமாகாந்த் ராய் என்பவர் ஸ்கார்லட்டைப் பார்த்து அசிங்கமாக செய்கை செய்துள்ளார்.

ஸ்கார்லட்டைப் பார்த்து அசிங்கமாகச் செய்கை செய்ததுடன் அவரை  தொடக் கூடாத இடத்தில் தொடவும் முயன்றதாக தெரிகிறது. இதை அடுத்து ஸ்கார்லட் ஆவேசத்துடன் உமாகாந்த் ராயை 'பளார்' என்று கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். 

உமாகாந்த் ராயின் செயலுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் சர்மா தெரிவித்துள்ளார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS