‘இசைக்கு மொழி கிடையாது’ -ஏஆர் ரகுமானுக்கு லதா மங்கேஷ்கர் ஆதரவு  

இந்தியச் சினிமா
Typography

லண்டன், ஜூலை.17- ‘இசைக்கு மொழி கிடையாது, இப்போது எழுந்து உள்ள விமர்சனங்களால் தான் மிகவும் வருத்தம் அடைந்து உள்ளதாகவும் கூறி ஏஆர் ரகுமானுக்கு பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் ஆதரவு தெரிவித்தார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற பெயரில் சமீபத்தில் நடத்திய இசை நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் அதிகமான தமிழ் பாடல்களை பாடியதாக இந்தி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.  

இதுபற்றி, இந்திய சினிமாவின் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பேசுகையில், ‘இசைக்கு மொழி கிடையாது என்றும் இப்போது எழுந்து உள்ள விமர்சனங்களால் தான் மிகவும் வருத்தம் அடைந்து உள்ளதாகவும் கூறினார்.  

மேலும் அவர் பேசுகையில், ‘என்னுடைய 70 வருட அனுபவத்தில் அதிகமான பிராந்திய மொழி பாடல்களை மேடைகளில் பாடி உள்ளேன், பஞ்சாபி, பெங்காலி மற்றும் தோக்ரி மொழி பாடல்களை கூட பாடியுள்ளேன். இந்திய மொழிகளில் பாடப்படும் அனைத்து பாடல்களையும் இசை ரசிகர்கள் ரசிப்பார்கள், இசைக்கு மொழி கிடையாது’ என்றார்.  

மேலும், ரகுமான்ஜி தமிழில் மிகவும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார், அவருடைய தமிழ்ப் பாடல்கள் இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு உள்ளது. இரு மொழியிலும் இந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவை. என்னுடைய அதிகமான இந்தி மொழிப் பாடல்கள் பெங்காலியில் உருவாக்கப்பட்டதுதான் என்றார்.  

‘சகிப்புத் தன்மையின்மையின் அறிகுறியானது இசையிலும் வளர வேண்டும், அதை நான் உணர்கிறேன், இது போன்ற சர்ச்சைகள் ஆரோக்கியமானது அல்ல’ எனவும் லதா மங்கேஷ்கர் கூறியுள்ளார்.  

லதா மங்கேஷ்கர் நீண்டகால பயணத்தில் சுமார் 38 பிராந்திய மொழிகளிலும், அனைத்துலக மொழிகளிலும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS