நடிகர் சிவகார்த்திகேயனுக்கு விருது' கடும் சர்ச்சையால் 'தூள்' பறக்கிறது!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.14- சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கான மாநில விருதினை தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு அறிவிக்கப்பட்ட விருதினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2009ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர் நடிகைகளுக்கான மாநில விருதினை தமிழக அரசு நேற்று அறிவித்தது.

இந்த பட்டியலில் 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) விருதுக்கு சிவகார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாண்டியராஜன் இயக்கிய 'மெரீனா' படத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கவனிக்க வேண்டியது, இந்த படம் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதிதான் படம் வெளியாகி இருந்தது. ஆனால் எப்படி 2011ஆம் ஆண்டின் விருது பட்டியலில் சிவகர்த்திகேயன் பெயர்  அறிவிக்கப்பட்டது என்று வலையதளவாசிகள் தமிழகஅரசின் தேர்வு குழுவை ‘கேலி செய்து’ கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால் இந்த படம் 2011ஆம் ஆண்டே சென்சார் செய்யப்பட்டுள்ளது. எனவே, அதன் அடிப்பையில் விருது கொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிவகார்திகேயன் ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள். வலைவாசிககளும் பதிலுக்கு ‘வெளிவராத படத்துக்கு விருதா’ எனவும் சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

மேலும் 2009 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான தமிழ்த் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 2009ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக 'பசங்க' திரைப்படமும், 2010ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக 'மைனா'வும், 2011ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக 'வாகை சூடவா'வும், 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக 'வழக்கு எண் 18/9'-வும், 2013ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக 'ராமானுஜர்' திரைப்படமும், 2014-ஆம் ஆண்டிற்கான சிறந்த படமாக  'குற்றம் கடிதல்' திரைப்படமும் தேர்வாகியுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS