பாவனா கடத்தல் விவகாரம்: நடிகர் திலீப், காவ்யா மாதவனுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.4- நடிகை பாவனா கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப்பும், அவருடைய மனைவி காவ்யா மாதவனும் கைது செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சித்திரம் பேசுதடி, ஜெயம்கொண்டான் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. இவர் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இரவு படப்பிடிப்பு முடித்துவிட்டுக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்த போது மர்மநபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளானார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  

இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பல்சர் சுனில் என்பவன், இதில் தொடர்புடைய ஒருவரின் பெயரை விரைவில் வெளியிடுவேன் என்று கூறி இருந்தான்.   

இந்நிலையில், பல்சர் சுனில் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக நடிகர் திலீப் புகார் தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் ‘திலீப்-காவ்யாமாதவன்’ தம்பதிக்கு எதிராக ஆதாரங்கள் வந்துகொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் பாவனா பாலியல் சீண்டலுக்குள்ளான வீடியோவை காவ்யா மாதவன் வைத்திருப்பதாக ‘பல்சர் சுனில்’ விசாரணையில் தெரிவித்திருந்தார். அவருக்கு எப்படி இந்த வீடியோ சென்றது, இதில் அவருக்கு என்ன தொடர்பு என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திலீப் - காவ்யா மாதவன் மற்றும் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி உள்ளிட்டோர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக போலீஸ் குழு ஒன்று  கொச்சியில் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதில் என்ன நடந்தது, இதில் நடிகர் தீலிப் மற்றும் நடிகை காவியாவிற்கு என்ன தொடர்பு என்பதும் கைது நடவடிக்கை மற்றும் விசாரணைக்கு பிறகு தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது.  

BLOG COMMENTS POWERED BY DISQUS