'பிக் பாஸ்' மாதிரி இது 'மொட்ட பாஸ்'; ஜூலியைக் கலாய்த்து வெங்கட் பிரபுவின் VIDEO!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.3- நடிகர் கமல்ஹாசன் வழிநடத்தும் ஸ்டார் விஜய்யின் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கிண்டலடிக்காதவர்கள் யாருமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. இதற்கு முன்னர் நெட்டிசன்கள் மட்டுமே மீம் செய்து பிக் பாஸ் குழுவைக் கலாய்த்து வந்த நிலையில் இப்போது சினிமா நடிகர்களும் அதே சாயலில் காணொளி வெளியிட்டுள்ளனர்.

நகைச்சுவைகளுக்கு பெயர் போன வெங்கட் பிரபு மற்றும் அவரின் குழுவினர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியைக் கிண்டலடித்து காணொளி வெளியிட்டுள்ளனர். காணொளிக்கு மொட்ட பாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் டீசர் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

    ### காணொளி: நன்றி பிளேக்டிக்கெட் கம்பெனி

அதில் சிவா, ஜெய், நிதின் சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். சிவா ஜூலி போலவும், ஜெய் ஓவியா போலவும் கிண்டல் செய்துள்ளனர். குறிப்பாக, சிவா பேசும்போது "எல்லாரும் என்னையே 'டார்கெட்' பண்றாங்க. எல்லாரும் பொறாமை. நான் அழகா இருக்கேன் என்பதுனால மற்றவர்களுக்கு பொறாமை" என்று கூறிகிறார்.

நடிகர் ஜெய், கைப்பேசியில் பேசிக்கொண்டே, "சூட்டிங் நடக்குது. போன் பயன்படுத்தக்கூடாது" என்று சொல்லி விட்டு, ஓவியாவைப் போல் பசிக்குது பசிக்குது பசிக்குது என்று கூறியுள்ளார். இது வெறும் டீசர் தான், பல பகுதிகள் இனிமேல் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS