மலேசிய நடிகர் பென்ஜீ இந்தோ.வில் கைது!

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், ஏப்ரல் 21- ஷாபு வகை போதைப் பொருளைக் கடத்தியதற்காக மலாய் நடிகர் பென்ஜீ  இந்தோனிசியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். 1990ஆம் ஆண்டுகளில் மலாய் சினிமாவின் புகழ்பெற்ற நடிகராக இவர் திகழ்ந்தார்.

கய்ரில் பெஞ்சமின் இப்ராஹிம் எனும் பென்ஜீ மேடான் கோலா நாமு அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவு அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டார்.

14 கிராம் அளவிலான இந்த ஷாபு போதைப் பொருளை இவர் கோலாலம்பூரில் உள்ள தனது நண்பரிடம் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தோனிசியாவில் வசிக்கும் ‘டிஜே’ என்ற தனது நண்பரைச் சந்திக்க இவர் அங்கு சென்றதாக போலீஸ் விசாரணையில் ஒப்புகொண்டதாக இந்தோனிசிய உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

இதனைத் தொடர்ந்து, அந்த நண்பரை இந்தோனிசிய போலீஸ் தேடுகிறது. மேலும், கோலாலம்பூரில் இருக்கும் இவரது நண்பரையும் மலேசிய போலீஸ் விரைவில் கைது செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

காலஞ்சென்ற மலாய் திரையுலக நாயகி அஸியான் இர்டாவாதியின் மகனான பென்ஜீ, 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே போதைப் பொருள் சம்பந்தப்பட்ட குற்றங்களில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS