"சிங்கம்-3" படப்பிடிப்புக்காக மலேசியா வருகிறார் நடிகர் சூர்யா! 

மலேசியச் சினிமா
Typography

சென்னை, ஆக.18- கபாலியைத் தொடர்ந்து அடுத்து சூர்யா நடிப்பில் வெளிவரவிருக்கும் சிங்கம்-3 படத்தின் காட்சிகள் இம்மாத இறுதியில் மலேசியாவில் பஎடுக்கப் படவிருக்கிறது என்று ஏர் டிரேவல் எண்டர்பிரைஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் உதவித் தலைவர் ஜே.மனோஜ் தாஸ் தெரிவித்தார்.

நடிகர் சூர்யா தம்முடைய படத்தின் படப்பிடிப்புக்கள் புத்ராஜெயா, கோலாலம்பூர் ஆகிய இடங்களின் பின்னணியில் நடைபெற வுள்ளன.  சூர்யாவும் அவருடைய 40 பேர் கொண்ட குழுவினரும் இம்மாத இறுதியில் கோலாலம்பூருக்கு புறப்படுவார்கள் என்று தெரியவருகிறது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சிங்கம்-3 படத்தின் சண்டைக் காட்சிகளும் மற்றும் பாடல் காட்சிகளும் மலேசியாவில படமாக்கப் படவிருக்கின்றன.

திரைப்படங்கள் தொடர்பான பயணங்களுக்கு மலேசிய மிகச் சிறந்த இலக்காக இருக்கின்றது ஏனெனில், மலேசியாவில் முழு மையாக ஒருங்கிணைக்கப்பட்ட  தயாரிப்புத்துறை வசதிகள், எதையும் மகிழ்ச்சியாக, நட்புறவாக எடுத்துக் கொள்ளும் மலேசிய ர்கள், மேலும் இதர நாடுகளுடனான கலாசார ஒருமைப்பாடுகள், ஆகியவற்றின் காரணமாக 30 முதல் 40 விழுக்காடு வரை செலவைச் சிக்கனமாகிறது என்று மனோஜ் தாஸ் குறிப்பிட்டார்.

படப்பிடிப்பு இடத்தேர்வு நிர்வாகத் துறையில் 21 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட மனோஜ் தாஸ், சூர்யாவின் சிங்கம்-1 மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்களின் தயாரிப்பிலும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கம் -2இல் முக்கியமான உச்சக்கட்ட காட்சிகள் மலேசியாவில் படமெடுக்கப்பட்டதைப் போலவே சிங்கம்-3 இல் சில முக்கிய காட்சிகள் கோலாலம்பூ ரிலுள்ள அதி உயரக் கட்டடங்களில் படமாக்கப்படும் என்று அவர் சொன்னார்.

மேலும், ஜோகூர் மாநிலத்திலுள்ள நூசாஜெயாவில் அமைந்திருக்கும் லெக்கோலேண்ட் சுற்றுலா தளத்தின் மீது இந்திய திரைப்ப டத் தயாரிப்பாளர்களின் கவனம் திரும்பி இருக்கிறது என்று மனோஜ் தாஸ் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS