காசிம் விவகாரம்: நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை- எமெர்ஜென்சி விஜய் விளக்கம்! (VIDEO)

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், பிப்.28- மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவையிலிருந்து (காசிம்) விலகுவதாக 11 இயக்கங்கள் நேற்று அறிவித்தவேளை, நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை என எமெர்ஜென்சி விஜய் கூறினார்.

நாட்டிலுள்ள கலைஞர்களையும் அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் உருவாக்கபட்ட காசிமில் முறைகேடுகளும் அதன் தலைவர் விஜய் எமெர்ஜென்சி வெளிப்படைத் தன்மை இன்றி செயல்படுவதாகவும் கூறி சுமார் 11 இயக்கங்களின் தலைவர்கள் காசிமிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காசிம் தலைவர் விஜய் எதிர்த்தரப்பினர் பல விசயங்களை மாற்றி பேசியுள்ளதாக கூறினார். நட்சத்திர விழா முடிந்த பிறகே பேரவையில் பிரச்சனைகள் தொடங்கியதாக கூறிய அவர் அதற்கு தனிநபரின் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணம் என கூறினார்.

 

  ### காணொளி: நன்றி Jeifm

"யாரையும் ஒதுக்குவது எங்கள் நோக்கம் அல்ல. அனைத்து 23 இயக்கங்களிலும் எந்த கலைஞர்களும் சேர்ந்து கொள்ளலாம். முன்னதாக, காசிமில் அனைத்து கலைஞர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கருத்து தெரிவித்தபோது நான் மறுப்பு கூறிய பிறகு இப்பிரச்சனைகள் பூதாகரமானது" என அவர் கூறினார்.

அவர்களின் கருத்துக்கு மாற்றுத் திட்டமாக, இயக்கங்களில் இருக்கும் கலைஞர்கள் அதில் நிலைத்துக் கொண்டே காசிம் கீழ் பாடகர், நடனம், இசை என பிரிவுகளைத் திறந்து அதில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தாம் கூறியதாகவும் ஆனால் எதிர்த்தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் விஜய் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS