அனைத்துலக திரைப்பட விழாவில் சங்கீதா நடித்த 'Adiwiraku' திரைப்படம்! -(Video)

மலேசியச் சினிமா
Typography

 கோலாலம்பூர், அக்.11- 29ஆவது மலேசிய திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்ற  'Adiwiraku' திரைப்படம், இந்த மாதம் நடைபெறவிருக்கும் 30-ஆவது தோக்கியோ அனைத்துலக திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கின்றது. 

தோக்கியோ அனைத்துலகத் திரைப்பட விழாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த செப்டம்பர் மாதம் 23-ஆம் தேதி புத்ரா வாணிப மையத்தில் நடந்தேறிய 29ஆவது மலேசிய திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம், சிறந்த மூலக்கதை மற்றும் சிறந்த நடிகைக்கான விருதுகளை இந்தத் திரைப்படம் தட்டிச் சென்றது.ஐந்தப்படத்தின் நாயகியான சங்கீதா சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றார்.

கெடா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமப்புறப் பகுதியைச் சேர்ந்த பினாங்கு துங்கால் இடைநிலைப் பள்ளி மாணவர்களைப் பற்றிய உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்ட 'Adiwiraku' திரைப்படத்தை, எரிக் ஒங் இயக்கியுள்ளார். 

இத்திரைப்படத்தில் நடிகை சங்கீதா கிருஷ்ணசாமி, ஆங்கில மொழி ஒப்புவிப்பு போட்டியில் கலந்துக் கொள்ள தனது மாணவர்களை ஊக்குவித்த 'ஷெரில்' என்ற ஆங்கில மொழி ஆசிரியையாக நடித்திருந்தார். இத்திரைப்படத்தை ஜேசன் சோங் எழுதித் தயாரித்து வெளியிட்டுள்ளார்.

அக்டோபர் 23-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 3-ஆம் தேதி வரை தோக்கியோ ரப்போங்கி அரங்கில் நடைப்பெறவிருக்கும் இந்தத் தோக்கியோ அனைத்துலக திரைப்பட விழாவில் ஆயிரக்கணக்கான திரைப்பட தயாரிப்பாளர்கள், திரைப்பட ரசிகர்கள், உலகெங்கும் உள்ள வணிகத் தொழிலதிபர்கள் மற்றும் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS