கோலாலம்பூர், பிப்.28- மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவையிலிருந்து (காசிம்) விலகுவதாக 11 இயக்கங்கள் நேற்று அறிவித்தவேளை, நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை என எமெர்ஜென்சி விஜய் கூறினார்.

நாட்டிலுள்ள கலைஞர்களையும் அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் உருவாக்கபட்ட காசிமில் முறைகேடுகளும் அதன் தலைவர் விஜய் எமெர்ஜென்சி வெளிப்படைத் தன்மை இன்றி செயல்படுவதாகவும் கூறி சுமார் 11 இயக்கங்களின் தலைவர்கள் காசிமிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய காசிம் தலைவர் விஜய் எதிர்த்தரப்பினர் பல விசயங்களை மாற்றி பேசியுள்ளதாக கூறினார். நட்சத்திர விழா முடிந்த பிறகே பேரவையில் பிரச்சனைகள் தொடங்கியதாக கூறிய அவர் அதற்கு தனிநபரின் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணம் என கூறினார்.

 

  ### காணொளி: நன்றி Jeifm

"யாரையும் ஒதுக்குவது எங்கள் நோக்கம் அல்ல. அனைத்து 23 இயக்கங்களிலும் எந்த கலைஞர்களும் சேர்ந்து கொள்ளலாம். முன்னதாக, காசிமில் அனைத்து கலைஞர்களும் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கருத்து தெரிவித்தபோது நான் மறுப்பு கூறிய பிறகு இப்பிரச்சனைகள் பூதாகரமானது" என அவர் கூறினார்.

அவர்களின் கருத்துக்கு மாற்றுத் திட்டமாக, இயக்கங்களில் இருக்கும் கலைஞர்கள் அதில் நிலைத்துக் கொண்டே காசிம் கீழ் பாடகர், நடனம், இசை என பிரிவுகளைத் திறந்து அதில் பதிவு செய்து கொள்ளலாம் என்று தாம் கூறியதாகவும் ஆனால் எதிர்த்தரப்பினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் விஜய் கூறினார்.

கோலாலம்பூர், பிப்.28- மலேசிய இந்தியக் கலை இயக்கங்களின் பேரவையிலிருந்து (காசிம்) விலகுவதாக 11 இயக்கங்கள் அறிவித்த வேளை ஆர்.ஓ.எஸ் எனும் பதிவு இலாகாவின் அடுத்த நடவடிக்கைகாக காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டிலுள்ள கலைஞர்களையும் அவர்கள் சார்ந்துள்ள இயக்கங்களையும் ஒன்றிணைக்கும் நோக்கில் உருவாக்க பட்ட காசிமில் முறைகேடுகளும் அதன் தலைவர் விஜய் எமெர்ஜென்சி வெளிப்படைத் தன்மை இன்றி செயல்படுவதாகவும் கூறி சுமார் 11 இயக்கங்களின் தலைவர்கள் காசிமிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.

இதுப்பற்றி பேசிய எம்.சிவா, "காசிம் பேரவையில் பல்வேறு மோசடிகள், முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதால் அது குறித்து நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கேள்வியெழுப்பினோம். ஆனால், எங்களின் புகார்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அதன் காரணமாக தேசிய சங்கப் பதிவிலாகாவில் (ஆர்.ஓ.எஸ்) இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

எங்களது புகாரைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் அது அதன் இயக்குநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இரண்டு தரப்புகளும் அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

நேற்று நடந்த இந்த செய்தியாளர் சந்திப்பில் டி.எச்.ஆர்.ராகா அறிவிப்பாளர் மாறன், இயக்குனர் எஸ்.டி. பாலா, இயக்குனர் திவாகர் சுப்பையா, இசையமைப்பாளர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோலாலம்பூர், ஜன.5- நாளை நடக்கவிருக்கும் நட்சத்திர கலை விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று கோலாலம்பூர் வந்தடைந்தார். அவருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நாளை தலைநகர் புக்கிட் ஜாலில் நட்சத்திர கலை விழா நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் பட்டாளம் இன்று காலையில் மலேசியா வந்தடைந்தது.

   ####காணொளி: நன்றி facebook

கார்த்தி, ஆர்யா, சிவகார்த்திகேயன், ஜீவா, சுஹாசினி, கௌதம் கார்த்திக், பிக் பாஸ் புகழ் வையாபுரி, ஆர்த்தி, கணேஷ் ஆகியோர் உட்பட 50க்கும் மேற்பட்ட நடிகர்கள் இன்று காலையில் தங்கும் விடுதிக்கு வந்தடைந்தனர்.

முன்னதாக, அதிகாலையில் நடிகர் ரஜினி கோலாலம்பூர் வந்தடைந்தார். அவரை செனட்டர் டி.மோகன் மாலை அணிவித்து வரவேற்றார். அவருக்கு சில பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

ரஜினி வரும் தகவல் அறிந்து தங்கும் விடுதிக்கு வெளியே காத்திருந்த பொதுமக்கள், 'தலைவா' எனக் கோஷமிட்டு ஆராவாரம் செய்தனர்.  

கோலாலம்பூர், ஜன.4- இவ்வார சனிக்கிழமையன்று புக்கிட் ஜாலில் அரங்கத்தில் நடைபெறவிருக்கும் 'நட்சத்திர கலை இரவு 2018' நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவிருக்கிறார் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்கு ஏகோபித்த ஆதரவு கிடைக்கும் என்று பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது. 

அதுமட்டுமல்லாது, இந்நிகழ்ச்சியின் போது 'ரோபோ 2.0' திரைப்படம் குறித்த இன்ப அதிர்ச்சி தகவல் ஒன்றை அவர் தனது ரசிகர்களுடன் பகிரவிருக்கிறார் என்று தென் இந்திய நடிகர் சங்கப் பொருளாளரான நடிகர் கார்த்தி சிவக்குமார் கூறினார். 

"ரோபோ 2.0 திரைப்படம் குறித்து ரஜினி சார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்றை கொடுக்கவிருக்கிறார். இது குறித்து வேறு எந்தத் தகவலையும் என்னால் பகிர்ந்துக் கொள்ள முடியாது. அதுமட்டுமல்ல, இந்நிகழ்ச்சியின் போது மேலும் பல 'அதிர்ச்சிகள்' மலேசிய ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன" என்று கார்த்தி சொன்னார். 

இவரின் பேட்டியின்படி ரஜினியின் அடுத்த படமான எந்திரன் 2.0 படத்தின் டீசர் மலேசியாவில் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

6-ஆம் தேதியன்று நடைப்பெறவிருக்கும் இந்த நட்சத்திர கலை இரவு நிகழ்ச்சியில், 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிகர்கள் மற்றும் மலேசிய நடிகர்கள் பங்கெடுத்துக் கொள்ளவிருக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள், மற்றும் பாடகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர். 

மை-இவண்ட்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலை இரவு நடைபெறவிருக்கிறது. சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 10 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைப்பெறும்.  

இந்நிகழ்ச்சியை நேரில் கண்டு களிக்க ரசிகர்கள் ரிம.10 தொடங்கி ரிம.30-க்குள் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். கிட்டத்தட்ட 30,000 டிக்கெட்டுகள் இதுவரை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக மை-இவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுவின் (MyEvents International Group) தலைமை செயல்முறை அதிகாரி ஷாஹூல் ஹமீட் கூறினார். 

More Articles ...