கற்பழிப்புக்கு மரண தண்டனை ஒன்றே  தீர்வு- வரலட்சுமி ஆவேசம்

Cinema
Typography

சென்னை, ஏப்.16- பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவின் வழக்கு இந்தியாவை உலுக்கி உள்ளது. இதற்கு பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். தற்போது நடிகை வரலட்சுமி சரத்குமார்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நம் நாடும்- மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு சித்திரை வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல் காலம் கடத்தாமல் நாம் நம்மையே கேள்வி கேட்டு கொள்ளும் நேரம் இது

இத்தகைய ஒரு சமுதாயத்திலா நாம் வாழ ஆசைப்பட்டோம். நம் வருங்காலத்தை நிர்ணயம் செய்வது நம் கடந்த காலமே என்பது பெரியோர் வாக்கு . ஏற்கனவே காலம் கடந்து விட்டது.

அரசியல்வாதிகள்,  கற்பழிப்புக் குற்றவாளிகள், குழந்தைகள் மேல் காமுறும் பேய்கலின் கைகளில் சிக்கி நாம் சின்னாபின்னமானது போதாதா?  நான் உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். எதிர்த்து கேள்வி கேளுங்கள். நியாயமான நல்ல விஷயங்களுக்காக எதிர்த்து நில்லுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

ஒரு குழந்தையின் ஓர் உயிரின் மதிப்பு என்பது ஒரு நாள் கோபத்திற்கும் இரங்கலுக்கும் மட்டுமே உரியதா என்னா?  நாம் அனைவரும் இணைவோம். நியாயம் கேட்போம். கற்பழிப்புக்கு- கற்பழித்தவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு என்ற சட்டம் இயற்ற போராடுவோம். இது சரியான நேரம். நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுப்போம். கேட்டால் மட்டுமே கிடைக்கும்.

கற்பழிப்பு என்பது நாம் சகித்து கொண்டுச் செல்லும் ஒரு விஷயமில்லை. நாம் அனைவரும் இது நம் பிரச்சனை இல்லை என்று நினைத்தால் வேண்டாம். இது யாருக்கு வேண்டுமானாலும் எப்போது  வேண்டுமானாலும் நடக்கும். இந்த ஆத்திரத்தையும் வலிமையையும் புரிந்துக் கொள்ள நான் ஒரு தாயாக வேண்டிய அவசியமில்லை. மனிதம் இருந்தாலே போதுமானது. "கற்பழிப்புக்கு மரண தண்டனை கொடு -எங்களுக்க நீதி வேண்டும் என போராடுவோம்"  இவ்வாறு நடிகை வரலட்சுமி சரத்குமார்  தமது அறிக்கை  கண்டனம் தெரிவித்தார்

BLOG COMMENTS POWERED BY DISQUS