தடையை மீறுவதா?  விஜய் சேதுபதி மீது விஷாலின் நடவடிக்கை  பாயுமா?

Cinema
Typography

சென்னை,ஏப்ரல்.3-  விஜய் சேதுபதி மற்றும் ஜூங்கா படக்குழு  மீது  தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தத்தால் ஒரு மாதத்திற்கும் மேலாக பல வேலைகள் எதுவும் நடக்கவில்லை புதுப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதற்கிடையே விஜய் சேதுபதியின் ஜூங்கா நல்லப்படியாக நடந்துள்ளது.

கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி,  சயீஷா சைகல் உள்ளிட்டோர் நடித்து வரும் ஜூங்கா தற்போது 

போர்த்துகலில் நடைபெற்று வருகிறது. சினிமா வேலை நிறுத்தம் நடந்துக் கொண்டிருக்கும் போது தடையை மீறி விஜய் சேதுபதி ஜூங்கா படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா வேலைகள் முடிந்து படப்பிடிப்பை நடத்த தேவையான கட்டணத்தையும் கட்டி  விட்டோம் என்கிறது படக்குழு அனைத்து கட்டணமும் செலுத்தி விட்டதால் பணம் வீணாக்கக் கூடாது என்று படப்பிடிப்பை தொடர்ந்ததாக ஜூங்கா படக்குழு  தெரிவித்துள்ளது

ஆனால் அவர்களின் விளக்கத்தை ஏற்க சிலர் தயாராக இல்லை. படக் குழுவினரிடம் விசாரித்து உரிய  நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்க வட்டாரத்தில்  கூறப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS