உடல் எடையைக் குறைக்க 'ஜிம்'மில் படாதபாடு படும் சினேகா! -(VIDEO)

Cinema
Typography

சென்னை, மார்ச்.20-  தன்னுடைய உடல் எடையைக் குறைக்க,  நடிகை சினேகா படாத பாடு பட்டு வருகிறார்.   உடற்பயிற்சிக் கூடமான 'ஜிம்'மில் தொடர்ந்து அவர் கடும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.  அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வேலைக்காரன்' படத்தில் நடித்திருந்தார் சினேகா.

#Video Source: Youtube#

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சினேகா சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் பிரசன்னாவை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து, சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். தற்போது இவர்களுக்கு பிரசன்னா விகான் என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில், தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.   'வேலைக்காரன்' படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார்.

இப்படத்தில் கொஞ்சம் உடல் எடை கூடியிருந்ததாகக் கூறப்பட்டது. அதிக உடல் எடை இருந்தால் சினிமா வாய்ப்பு கிடைக்காது என்று கருதி உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு வருகிறார்.

இதனால், 'ஜிம்' தான் கதி என்று இருந்து வருகிறார். இவருக்கு பக்கபலமாக இவரது கணவர் பிரசன்னா இருக்கிறாராம். தான் உடற்பயிற்சி  செய்யும் ஜிம் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை சினேகா.

BLOG COMMENTS POWERED BY DISQUS