Welcome : Guest
Login
Create Account
மொழி
English
தமிழ்
Home
News
Product
Blog Spot
Classified Ads
Audio/Video
Comments
Contactus
வணக்கம் மலேசியா செய்திகள்
04-Sep-2010
விரிவான செய்திகள்
Back
துன் டாக்டர் லிங் லியோங் சிக் மீது வழக்கு
30-07-2010 (13:56:56)
போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சரும் ம.சீ.ச.வின் முன்னாள் தலைவருமான துன் டாக்டர் லிங் லியோங் சிக் மலேசிய அரசாங்கத்தை ஏமாற்றியதாக நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டிருக்கிறார். துன் பட்டம் வாங்கியவர்களுள் 67 வயதான டாக்டர் லிங் தான் முதன் முதலாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
கிள்ளான் துறைமுகத்தில் தீர்வையற்ற பகுதி நிறுவ இடம் கொள்முதல் செய்வதில் அமைச்சரவையை ஏமாற்றியதாக இவர் மீது குற்றச்சாற்று எழுந்துள்ளது. இவருடன் மேலும் நால்வர் இந்தப் பிரச்சினை தொடர்பாக நீதி மன்ற வழக்கை சந்திக்கவிருக்கின்றனர். கடந்த ஆண்டு டத்தின் படுக்கா ஓசி பாங்கும் மேலும் மூவரும் நம்பிக்கை மோசடி புரிந்ததாகவும் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாற்றப்பட்டனர்.
14 ஆண்டுகள் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய டாக்டர் லிங், தாம் நிரபராதி என்று கூறிக்கொண்டார். இவருக்கு பத்து லட்சம் ரிங்கிட் ஜாமீன் அனுமதித்து வழக்கை செப்டம்பர் மாதம் 3-ஆம் தேதிக்கு நீதிபதி சூசானா ஹூசைன் ஒத்தி வைத்தார்.
டாக்டர் லிங் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாற்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
விளம்பரம்
Copyright © 2008
Vanakkam Malaysia Dotcom Sdn. Bhd.
All Rights Reserved
Designed by
VIIBES