Welcome : Guest
Login
Create Account
மொழி
English
தமிழ்
Home
News
Product
Blog Spot
Classified Ads
Audio/Video
Comments
Contactus
வணக்கம் மலேசியா செய்திகள்
10-Sep-2010
விரிவான செய்திகள்
Back
காதலுக்கு தடை - கடத்தப்பட்டார் ஆசிரியை
30-07-2010 (13:29:27)
கள்ளக்குறிச்சியில் காதல் மணம் புரிந்த தங்களது மகளை அவரது தாயார், சகோதரர், தாய்மாமா மகன் ஆகியோர் கடத்திச் சென்று விட்டதாக கல்லூரி ஆசிரியையின் கணவர் புகார் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள திம்மலை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை (24). இவர் அதே ஊரைச் சேர்ந்த சரண்யா என்பவரின் வீட்டில் டிரைவராக இருந்தார். சரண்யா தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசிரியையாக இருந்து வருகிறார்.
இருவருக்கும் காதல் மலரவே, வீட்டை விட்டு வெளியேறி திண்டிவனத்தில் பதிவு திருமணம் [^] செய்து கொண்டு, திருகருக்கல் என்ற இடத்தில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்கள்.
இந்த நிலையில், நேற்று மாலை சரண்யா கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது, அவரது தாயார் ஜெயசித்தமேரி, அண்ணன் சக்ரவர்த்தி, தாய்மாமன் மகன் ரவி ஆகியோர் காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் ஏழுமலை புகார் செய்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சரண்யாவைத் தேடி வருகின்றனர்.
விளம்பரம்
Copyright © 2008
Vanakkam Malaysia Dotcom Sdn. Bhd.
All Rights Reserved
Designed by
VIIBES