Welcome : Guest
Login
Create Account
மொழி
English
தமிழ்
Home
News
Product
Blog Spot
Classified Ads
Audio/Video
Comments
Contactus
வணக்கம் மலேசியா செய்திகள்
09-Sep-2010
விரிவான செய்திகள்
Back
ஆள் கடத்தல் குற்றத்திற்கு கடுமையான தண்டனை
30-07-2010 (13:25:55)
ஆள் கடத்தல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மலேசிய சிறைத்தண்டனை மூன்று மடங்காகவும் மிக அதிகமான அபராதத் தொகையும் விதிக்க முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் இங்கு பணிபுரியும் அந்நியத் தொழிலாளர்களை வரம்புக்கு மீறி வேலை வாங்குவதையும் அரசு கண்காணிக்கும்.
ஆள் கடத்தல் தொடர்பான சட்டதிட்டங்களை நாடாளுமன்றம் ஏற்றுக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்டத் திருத்தஙக்ள் செனட் சபையில் இம்மாத துவக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
போரினால் சீரழிந்த நாடுகளில் இருந்தும் ஏழ்மையான நாடுகளில் இருந்தும் மலேசியாவுக்கு வேலை செய்யவதற்கு வருகிறார்கள். அல்லது இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு நுழைய ஆயத்தமாக வருகிறார்கள். ஏஜெண்டுகளின் ஆசை வார்த்தைகளில் மயங்கி தொழிலாளர்கள் இங்கு வந்து விடுகிறார்கள். பல பெண்களை பாலியல் தொழிலுக்கு வலுக்கட்டாயமாக தள்ளி விடுகிறார்கள்.
மலேசிய அரசு 2008- ஆம் ஆண்டில் இருந்து இது வரை 1200 பேரைக் காப்பாற்றி இருக்கிறது. ஆள்கடத்தல் சம்பந்தமாக 155 வழக்குகளை நீதி மன்றத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஒன்பது பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தில் தொழிலாளர்களை சித்திரவதை செய்தாலோ கடுமையாக நடத்தினாலோ முதலாளிமார்களுக்கு 20 ஆண்டுவரை சிறைத்தண்டனை வழங்க முடியும். ஆள் கடத்தல் சம்பவத்திற்கு 10 லட்சம் வெள்ளிவரை அபராதம் விதிக்கலாம். தொழிலாளர்களை மீண்டும் அவர்கள் நாட்டிற்கு அனுப்பும் செலவையும் முதலாளிமார்களே ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விளம்பரம்
Copyright © 2008
Vanakkam Malaysia Dotcom Sdn. Bhd.
All Rights Reserved
Designed by
VIIBES