Welcome : Guest
Login
Create Account
மொழி
English
தமிழ்
Home
News
Product
Blog Spot
Classified Ads
Audio/Video
Comments
Contactus
வணக்கம் மலேசியா செய்திகள்
10-Sep-2010
விரிவான செய்திகள்
Back
யூபிஎஸ்ஆர், பிஎம்ஆர் தேர்வுகள் அகற்றப்படுமா?
30-07-2010 (13:10:51)
(சீராகி)
பாலர் பள்ளியை முடித்துவிட்டு ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் ஒரு மாணவன் ஆறு ஆண்டுகள் ஆரம்பப்பள்ளியில் படித்து முடிக்கிறான். அந்தச் சின்னஞ் சிறு மாணவன் என்ன கற்றுணர்ந்துள்ளான். எந்த அளவுக்கு ஆரம்பக் கல்வியைப் பெற்றுள்ளான்.. அவனுடைய புரிந்துணர்வு எந்த நிலையில் இருக்கிறது. என்ற தர நிர்ணயம் ஆறாம் வகுப்புத் தேர்வில் அடங்கி இருக்கிறது.
எல்லாப்பிள்ளைகளும் ஓரளவு தேறிவிடுவார்கள். ஆனால், மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்று ஆற்றல் குறைந்த மாணவர்களை யூ பி எஸ் ஆர் தேர்வு முறை அடையாளம் காட்டி விடும். இவர்களின் பால் தனிக்கவனம் செலுத்தி கல்வியைத் தொடரச் செய்ய ஓர் அரிய வாய்ப்பை இந்தத் தேர்வு முறை அளிக்கிறது.
பிறகு உயர் நிலைப் பள்ளியில் ஐந்து ஆண்டுகள் படிக்க வேண்டியுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் முதல் 3 ஆண்டுகள் படித்தவுடன் மாணவனுக்கு எந்தத் துறையில் ஈடுபாடு இருக்கிறது என்று தெரிந்துவிடும். மூன்றாம் படிவத்தில் வைக்கப்படும் தேர்வு, ஒரு மாணவனின் திறன் எந்தத்துறையை சார்ந்திருக்கிறது என்று தெரிய வைக்கும். அதனால்தான் அந்தக் காலத்தில் எல் சி ஈ என்றும் எஸ் ஆர் பி என்றும் மூன்றாம் படிவத்தில் தேர்வு முறையைக் கல்வியாளர்கள் அறிமுகப்படுத்தினார்கள். இப்போது 3-ஆம் படிவத் தேர்வு முறையை பிஎம்ஆர் என்று அழைக்கிறார்கள்.இந்த பிஎம்ஆர் தேர்வும் வேண்டுமா என்ற கேள்வி திடீரென கல்வியமைச்சர் மனதில் எழுந்திருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் கல்வி அமைச்சு நாட்டின் மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மலேசியா போல வேறு எந்த நாட்டிலும் கல்விக் கொள்கைகள் இந்த அளவுக்கு அடிக்கடி மாற்றப்படுவதில்லை. ஒவ்வொரு முறையும் புதிய கல்வி அமைச்சர் பொறுப்பு ஏற்றதும் தனது பங்கிற்கு ஏதாவது மாற்றங்கள் செய்து விட்டு போய் விடுகிறார்.
யூபிஎஸ்ஆர் - பிஎம்ஆர் தேர்வுகளை அகற்றுவதா அல்லது தொடர்ந்து நிலை நிறுத்துவதா என்பது குறித்து கல்வியாளர்கள், பொது இயக்கங்கள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகியோரின் கருத்துக்களை அறிந்து கொள்ள கடந்த மாதம் 19-ஆம் தேதி ஒரு கூட்டமும் ஜூலை 27-ஆம் தேதி ஒரு கூட்டமும் நடத்தப்பட்டன.
தற்போது நடப்பில் இருக்கும் யூபிஎஸ்ஆர் - பிஎம்ஆர் தேர்வு முறைகள், மாணவர்களின் சிந்தனை ஆற்றல், புத்தாக்கத் திறன் எதிர்பார்க்கும் அளவில் மேம்படுத்தவில்லை என்ற கருத்து நிலவுகிறது. அதாவது இவ்வளவு நாள் அமலில் இருந்து வரும் கல்வி முறை, தற்காலத்திற்கு ஒத்து வராது என்ற கருத்தில் சில அரசியல்வாதிகளும் கல்வியாளர்களும் இருந்து வருகிறார்கள். யூபிஎஸ்ஆர் - பிஎம்ஆர் தேர்வு முறைக்கு பதிலாக வேறு ஒரு புதிய தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டால் நாம் வரவேற்கலாம். ஆனால், இரண்டு அரசாங்கத்,தேர்வுகளுமே தேவையில்லை... ஒன்றாம் வகுப்பில் நுழையும் ஒரு மாணவன் 5-ஆம் படிவம் வரை எந்தத் தடங்கலும் இல்லாது இடையில் தேர்வு முறைகள் அகற்றப்பட்டு இறுதிக் கட்டத்தில் ஒரு தேர்வுக்கு உட்கார்ந்தால் அவனுடைய தரத்தை எப்படி நிர்ணயம் செய்ய முடியும்.
ஆறாம் வகுப்பு, மூன்றாம் படிவத் தேர்வுகள் அகற்றப்படாமலேயே புத்தாக்கம், புதியசிந்தனை, படைப்பாற்றல் திறன்களைப் புதிய கல்வித்திட்டத்தின் வழி அறிமுகப்படுத்தி வெற்றி பெற முடியாதா?
பலர் மூன்றாம் படிவ பிஎம்ஆர் தேர்வுகளை அகற்றி விட்டு கற்றல் முறையை மறுசீரமைத்தால் பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அந்தக் கருத்தையும் கல்வியமைச்சு பரிசீலனை செய்யலாம்.
தேர்வு என்பது ஒரு சவால். அது இல்லாமல் போனால் மனோத்தத்துவ ரீதியாக போட்டி போடும் ஆற்றல் மழுங்கிப் போகும். ஆசிரியர் வர்க்கத்தின் உத்வேகமும் இயல்பாகக் குறைந்து விடும். அதனால், யூபிஎஸ்ஆர் தேர்வு தொடரப்பட வேண்டும். பிஎம்ஆர் தேர்வு முறையில் மாற்றம் செய்து சிந்தனை ஆற்றலைப் பெருக்க ஆவன செய்தல் வேண்டும்.
விளம்பரம்
Copyright © 2008
Vanakkam Malaysia Dotcom Sdn. Bhd.
All Rights Reserved
Designed by
VIIBES