Top Stories

மேஷம்:

திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சவால்களில் வெற்றி கிட்டும் நாள். 

ரிஷபம்:

இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். நேர்மறை சிந்தனைகள் தோன்றும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 

மிதுனம்:

மதியம் 1.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பு களையும் ஒப்படைக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து அதிகம் யோசிப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். மாலைப் பொழுதிலிருந்து மகிழ்ச்சி தங்கும் நாள். 

கடகம்:

குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டாரத்தில் அலைச்சல் ஏற்படும். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மதியம் 1.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள். 

சிம்மம்:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். இனிமையான நாள். 

கன்னி:

உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உடன் பிறந் தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். திடீர் சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார் கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

துலாம்:

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள். 

விருச்சிகம்:

மதியம் 1.15 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். லேசாக தலைவலி, வயிற்றுவலி வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள். 

தனுசு:

குடும்பத்தில் ஆரோக்யமான விவா தங்கள் வந்து போகும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். தாய்வழியில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 1.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள். 

மகரம்:

சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்கு வீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ் வீர்கள். வழக்கில் சாதகமாக தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். தொட்டது துலங்கும் நாள். 

கும்பம்:

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நினைத்தது நிறைவேறும் நாள். 

மீனம்:

எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். 

மேஷம்:

குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திட்டங்கள் நிறைவேறும் நாள். 

ரிஷபம்:

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில காரியங் களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். 

மிதுனம்:

குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கனிவாகப் பேசப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 

கடகம்:

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலித மாகும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். மனைவி வழி யில் உதவிகள் கிடைக்கும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்:

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கு வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புகழ், கௌரவம் கூடும் நாள். 

கன்னி:

கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பாராத காரியங்கள் முடியும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

துலாம்:

சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒரே முயற்சி யில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து முடிப்பீர்கள். சிறுசிறு ஏமாற்றம் வந்து நீங்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத் தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளி யிட வேண்டாம். தர்மசங்கடமான சூழல் களை சமாளிக்க வேண்டிய நாள். 

விருச்சிகம்:

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமை யாக நம்புவார். நன்மை கிட்டும் நாள். 

தனுசு:

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப் பதவி யில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத் தில் மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத் தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அமோகமான நாள். 

மகரம்:

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள். 

கும்பம்:

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பிள்ளைகளால் நிம்மதி அடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள். 

மீனம்:

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். உறவினர்கள் மதிப்பார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.

மேஷம்: 

காலை 8.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப் பாருங்கள். வராது என்றிருந்த பணம் வரும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். 

ரிஷபம்: 

காலை 8.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். 

மிதுனம்: 

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிகம் உழைக்க வேண்டிய நாள். 

கடகம்: 

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

சிம்மம்: 

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சாதிக்கும் நாள். 

கன்னி: 

காலை 8.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானித்து செயல் படப்பாருங்கள். பிற்பகல் முதல் இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மனசாட்சி படி செயல்படும் நாள். 

துலாம்: 

காலை 8.15 மணி முதல் சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 

விருச்சிகம்: 

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

தனுசு: 

எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். தொட்டது துலங்கும் நாள். 

மகரம்: 

புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள். 

கும்பம்: 

எதிர்ப்புகள் அடங்கும். நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

மீனம்: 

தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள். 

மேஷம்: 

புத்திசாலித்தனம் அதிகரிக்கும். இனிய பேச்சுக்களால் கூடுதல் வருமானங்கள் ஏற்பட்டுப் பொருளாதார நிலை உயரும்.. தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவால் சந்தோஷம் நிலவும்.

ரிஷபம்: 

மனதில் ஒரு நிம்மதியற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் அதிகரிக்கும். கற்பனை வளமும் பெருகும். எதிர்பார்த்த வரவுகள் வந்து ஏற்றம் தரும்.

மிதுனம்: 

பெண்களால் இலாபம் ஏற்படும். பொருளாதார நிலை உயரும். ஆரோக்கிய நிலை மேம்படும். பிரிந்தவர் கூடி மகிழ்வர். மாணவர்கள் புதிய கல்லூரிகளில் சேருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர்.

கன்னி: 

பிரச்சனைகள் தீர தெய்வத்தை வணங்குங்கள். தேவைகள் நிறைவேறும். வீண் சிந்தனைகள் அதிகரிப்பதின் காரணமாக வெற்றிகள் தடைப்படலாம். குடும்ப உறுப்பினர்கள் இடையே கருத்து மோதல்கள் ஏற்படலாம்.

மகரம்: 

அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தாயின் உடல்நிலையில் சுகக் குறைவு ஏற்படலாம். அவரின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையாது.

கடகம்: 

திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகலாம். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.

சிம்மம்: 

செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரித்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்:

குடும்ப உறவுகளால் சந்தோஷ அனுபவங்கள் கூடும். குழந்தைகளின் திறமை கண்டு மகிழ்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தீர்த்த யாத்திரைகள் திருப்தி தரும்.

தனுசு:

எதிர்பார்த்த இடங்களிலிருந்து பணம் வருவது தாமதப்படும். செலவுகள் கூடும். செயல்திறன் குறைவதால் கெட்ட பெயர் ஏற்படலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்:

தனவரவு கூடும். இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள். தொழில், வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். மனவி மூலம் நன்மை பல உண்டாகும்.

கும்பம்:

பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.

மீனம்:

தைரியக் குறைவால் மனதில் தெம்பும், தெளிவும் மறைந்து வாழ்க்கையில் பின்னடைவு ஏற்படும். அதன் காரணமாகக் காரியத்தடைகளும், தோல்விகளும் கதவைத் தட்டும்.

 

மேஷம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். பழைய கடன் பிரச்சனை அவ்வப் போது மனசை வாட்டும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள். 

மிதுனம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 

கடகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள். 

சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும். பழைய சிக்கல்கள் தீரும். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதியான நாள்.

கன்னி: சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக்கும். அடுத்தவர்கள் மனசு காயப்படும்படி பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். போராட்டமான நாள்.

துலாம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள். 

விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 

தனுசு: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். புதியவர் கள் நண்பர்களாவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத் தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.

மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். திடீர் உதவி கிட்டும் நாள்.

கும்பம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப் பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள். 

மீனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள். 

மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.

ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்காக மேலதிகாரியிடம் பரிந்துப் பேசுவீர்கள். செல்வாக்குக் கூடும் நாள். 

மிதுனம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர் காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்று வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

கடகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் பல வேலைகளை யும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர் கள், நண்பர்களால் செல வினங்கள் அதிகரிக்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். 

கன்னி: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 

துலாம்: பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டு வீர்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற் படும். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள். 

விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு செயல் படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள். 

தனுசு: மனதிற்கு பிடித்த வர்களை சந்திப்பீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப் படும். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர் கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளு வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்பு கள் தேடி வரும். வெற்றி பெறும் நாள். 

கும்பம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். ஆடை, ஆபரணம் சேரும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள். 

மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சிக்கனம் தேவைப்படும் நாள். 

Advertisement