சிங்கையில் மரணதண்டனையில் இருந்து கோபு ஜெயராமன் தப்பினார்!

Uncategorised
Typography

சிங்கப்பூர், பிப்.14- போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மரணதண்டனையை எதிர்நோக்கி இருந்த மலேசிய இந்திய இளைஞர் ஒருவர், சிங்கப்பூரில் மரண தண்டனையில் இருந்து தப்பினார்.

மலேசியரான கோபு ஜெயராமன் கடந்த 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி இவர் உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்தார்.

அவரது மோட்டார் சைக்கிளை குடிநுழைவு அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அதில் 3 பொட்டலங்களில் ஹெராயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், கோபுவை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவற்றை அவர் கடத்தி வரவில்லை என்று மறுத்தார். மேலும், அந்த மோட்டார் சைக்கிள் தனக்கு உரியது அல்ல எனவும் குறிப்பிட்டார். 

அதைத் தொடர்ந்து அவரது உதவியுடன் அதிகாரிகள் ஹெராயின் கடத்தல்காரர்கள் பற்றி துப்பு துலக்கினர்.

இந்நிலையில் அவர் தன் மீதான குற்றச்சாட்டு தவறானது என்றும் தாம் ஹெராயின் கடத்தி வரவில்லை என்றும் நீதிமன்றத்தில் நிரூபித்தார். இதையடுத்து அவரை நீதிமன்றம் விடுதலை செய்தது. இதன்முலம் அவர் மரண தண்டனையிலிருந்து தப்பினார்.