Latestமலேசியா

LTTE விவகாரம் : குணசேகரன் – சாமிநாதன்- சுரேஷ்குமாருக்கு ஜாமின் மறுப்பு

கோலாலம்பூர், ஜன 16 –  தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தது மற்றும் விடுதலைப்  புலிகள் இயக்கம் தொடர்பான ஆவணங்களை வைத்திருந்ததாக  சொஸ்மா பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருக்கும்  டி.ஏ.பி சட்டமன்ற உறுப்பினர்களான   பி.குணசேகரன்,  ஜி.சாமிநாதன் மற்றும்  சுரேஷ்குமார் ஆகியோர்  ஜாமினில்  விடுதலையாகுவதற்கு இன்னமும் காத்திருக்க  வேண்டியுள்ளது.    

அந்த மூவரும்   வாதத்தொகுப்புக்களை சமர்ப்பிக்க வேண்டுமென  உயர்நீதிமன்றத்தின் மூன்று வெவ்வேறு நீதிமன்றங்களில்  தெரிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டின்  பாதுகாப்பு குற்றங்கள்  சிறப்பு நடவடிக்கை சட்டத்தின் கீழ் சொஸ்மா சட்டத்தின்  13ஆவது விதி சட்டத்திற்குட்பட்டதாக இல்லையென்ற முடிவு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் வழக்கில் உட்படுத்தக்கூடியதா என்பது குறித்து  இரண்டு தரப்புகளும்  வாதத் தொகுப்புகளை  சமர்ப்பிக்க் வேண்டுமென   முடிவு செய்தது.

கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்   8 மற்றும் 121ஆவது விதிகள் சொஸ்மா  சட்டத்தின்  113ஆவது விதிக்கு   எதிராக  இருப்தாக  உயர்நீதிமன்ற நீதிபதி  முகமட் நஸ்லான் முகமட் கஷாலி நவம்பர் 29ஆம்  தீர்ப்பளித்தார்.  ஆனால் தண்டனைச் சட்டத்தின்  6 ஆவது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கு   ஜாமின் வழங்குவதை சொஸ்மா சட்டத்தின் 13வது விதி   அனுமதி மறுக்கிறது.
அதேவேளையில்   சிவில் மற்றும் குற்றவியல் விவகாரங்களில்  முடிவு எடுப்பது நீதிமன்றங்களின் பிரத்தியோக சிறப்பு உரிமையாகும்  அல்லது நீதி பரிபாலனத்தின் உரிமையென  நீதிபதி நஸ்லான் தமது தீர்ப்பில் கூறியிருந்தார்.
எனினும்  நஸ்லானின் தீர்ப்பு தங்களை உட்படுத்துகிறதா என்பது குறித்து உயர்நீதிமன்ற  நீதிபதிகளான  டத்தோ முகமட்  ஜாமில் உசேய்ன், கோலின் லாரன்ஸ் செக்குரா மற்றும் நீதித்துறை ஆணையர் டத்தோ அகமட் ஷாரிர்   முகமட்  சாலே ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், (வயது 60), காடேக் சட்டமன்ற உறுப்பினரும் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினருமான  சாமிநாதன்  மற்றும ஜ.செ.க உறுப்பினரான  சுரேஸ் குமார் (வயது 44) ஆகியோரின்   ஜாமின் மனு மீதான விசாரணையை  செவிமடுப்பதற்கான தேதி  இன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குணசேகரன் மற்றும்   சுரேஸ் குமார் மீதான   விசாரணைக்கான தேதியை   பிப்ரவரி 23ஆம் தேதிக்கு   முகமட் ஜாமிலும்,  லாரன்ஸ் செக்குராவும் நிர்ணயித்தனர். நஸ்லான் எப்படி இந்த முடிவுக்கு வந்தார் என்பதை தாம் தெரந்துகொள்ள  விரும்புதாக  லாரன்ஸ் செக்குரா  கூறினார்.
அதே வேளையில் சாமிநாதன் மீதான வழக்கை செவிமடுத்த  அகமட்  ஷாரிர்  இந்த வழக்கில்   நஸ்லானின்   தீர்ப்பை ஏற்றுக்கொள்வதா அல்லது குற்றஞ்சாட்டப்பட்டவரின் ஜாமின்  மனு விண்ணப்பம் குறித்த வழக்கை செவிமடுப்பதற்கு  ஜனவரி 24ஆம் தேதியை  நிர்ணயித்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே    குணசேகரன், சாமிநாதன் மற்றும் சுரேஸ்குமார் ஆகியோருக்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில்   ஜ.செ.கவின்  மூத்த தலைவர்  லிம் கிட் சியாங்,  ம.இ.காவின் துணைத்தலைவர்  டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவித் தலைவர் செனட்டர் டத்தோ டி.மோகன், கல்வித்துறையின் முன்னாள் துணையமைச்சர் டத்தோ பி.கமலநாதன் ஆகியோரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!