Latestசினிமாமலேசியா

BollyOne HD அலைவரிசை 251ல் ஜனவரி மாத திரைப்படங்கள்

வியாழன், 2 ஜனவரி
ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா கியோன் அடா ஹை  @ 09:00pm
நடிகர்கள்: மனவ் கவுல், நந்திதா தாஸ், சௌரப் சுக்லா, கிஷோர் கதம் மற்றும் ஓம்கர் தாஸ் மணிக்புரி
ஆல்பர்ட் பிண்டோ கோ குஸ்ஸா கியோன் அடா ஹை, 1980-ஆம் ஆண்டு விருது பெற்ற பாலிவுட் திரைப்படத்தை மையமாக கொண்டு இயக்கப்பட்ட ஒரு அற்புதமான திரைப்படமாகும். இத்திரைப்படம் தனது குடும்பத்தினருக்கும் காதலிக்கும் தெரிவிக்காமல் ஒரு ஹிட்மேனாக தனது முதல் பணியைச் செய்ய கோவாவிற்குப் பயணம் செல்லும் ஆல்பர்ட் பிண்டோவைப் பற்றிய சுவாரஸ்யமான கதையை மிக அழகாக சித்தரிக்கின்றது. அவர்களோ ஆல்பர்ட் பிண்டோ காணாமல் போய்விட்டதாக தவறாக புரிந்துக் கொண்டு அவரை கண்டுப்பிடித்து தரும்பட காவல் துறையினரிடம் புகாரளிக்கின்றனர். ஆல்பர்ட் பிண்டோ தனது குடும்பத்தினரிடம் தானே சுயமாக திரும்புவாரா அல்லது காவல்துறையினர் அவரைக் கண்டுபிடிப்பார்களா? எக்காரணம் அவரை ஒரு ரகசிய ஹிட்மேனாக பணியாற்ற வித்திட்டது? இதனை கண்டறிய இத்திரைப்படத்தை தவறாமல் காணுங்கள்.

வியாழன், 9 ஜனவரி
நோபல்மென் @ 09:00pm
நடிகர்கள்: குணால் கபூர் (முரளி) மற்றும் அலி ஹாஜி (ஷே)

புதிதாக வெளியிடப்பட்ட இந்திய ஆங்கில மொழி நாடகமான இத்திரைப்படத்தில்முக்கிய குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த அலி ஹாஜி நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் ‘சிறந்த குழந்தை நடிகர்’ எனும் விருதை வாகை சூடினார்.

இத்திரைப்படம், 15 வயதான ஷே தனது உறைவிட பள்ளியில் பகடிவதையினால் தொடர்ந்து கொடுமைகளை அனுபவிப்பதன் காரணமாக தனது இளம் பருவத்தோடு போராடி வருவதை மிக அழகாக வெளிக்கொணர்கிறது. ஷே மற்றும் அவனது தோழி பியா Merchant of Venice எனும் நாடகத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கின்றனர். ஆனால், பியா மீது ஆர்வமுள்ள திரைப்பட நட்சத்திரத்தின் மகனான பாடால், எப்படியாவது ஷேவின் கதாப்பாத்திரத்தை தட்டி பறிக்க எண்ணுகிறான். பாடால் தனது நண்பரான அர்ஜுனின் உதவியை நாடுகிறான் – ஷேயை பகடிவதைக்கு ஆளாக்குபவன். கொடூரமாக பகடிவதை இழைத்தால் ஷே, அவனது பாத்திரத்தை விட்டுக் கொடுத்து விடுவான் என்ற நம்பிக்கையில் அர்ஜுன் அதிக தீங்கிழைக்கிறான். ஆனால் ஷேயோ, அதனை செய்ய மறுக்கிறான். ஷேவிடமிருந்து அப்பாத்திரத்தை பாடால் கைப்பற்றுவானா? தெரிந்துக்கொள்ள இத்திரைப்பட்தை தவறாமல் காணுங்கள்.

வியாழன், 16 ஜனவரி
அர்ஜுன் பாட்டியாலா @ 09:00pm |


நடிகர்கள்: தில்ஜித் டோசன்ஜ், கிருதி சனோன் மற்றும் வருண் சர்மா
நகைச்சுவை கூறுகளைக் கொண்ட இத்திரைப்படம், புதிதாக நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி அர்ஜுன் பாட்டியாலா தனது சொந்த ஊரில் குற்றங்களையும் ஊழல்களையும் கட்டுப்படுத்த தனது பக்கவாட்டு ஒனிடா சிங்கின் உதவியுடன் முயற்சிப்பதை சித்தரிக்கின்றது. அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா என்பதைக் கண்டறிய ‘அர்ஜுன் பாட்டியாலா’ திரைப்படத்தை கண்டு களிப்பதோடு வயிறு குளுங்க சிரித்து மகிழுங்கள்.

வியாழன், 23 ஜனவரி
மிஷன் மங்கல் @  09:00pm


நடிகர்கள்: அக்‌ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி பன்னு, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி, ஷர்மன் ஜோஷி, மற்றும் சோனாக்ஷி சின்ஹா
ஒரு உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட, ‘மிஷன் மங்கல்’ இந்தியாவின் விஞ்ஞானிகளை பற்றியும் அவர்களின் முதல் கிரக பயணத்தைப் பற்றியும் மிக அழகாக சித்தரிக்கின்றது. திட்ட இயக்குனர் தாரா ஷிண்டே ஒரு சிறிய பிழையைச் செய்ய, ​​ஒரு திட்டம் தோல்வியடைய, அவரது சக விஞ்ஞானி ராகேஷ் தவான் பழியை ஏற்றுக்கொள்கிறார். எனவே, வேறொரு திட்டத்தில் பணிபுரியும் பணியில் அமர்த்தப்படுகிறார். சாத்தியமற்றது என்று கருதப்பட்ட ‘மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன்’ என்ற திட்டத்தில் பணிபுரியும் போது, ​​தாரா ராகேஷை வித்தியாசமாக விஷயங்களைச் செய்ய தூண்டுகிறார். இருவரும் வெற்றிபெற்று புதியதொரு வரலாறு படைப்பார்களா? அறிந்துக் கொள்ள ‘மிஷன் மங்கல்’ திரைப்படத்தை தவற விடாதீர்கள்.

வியாழன், 30 ஜனவரி
சிசோரே @ 09:00pm


நடிகர்கள்: சுஷாந்த் சிங் ராஜ்புத், ஷ்ரத்தா கபூர், வருண் சர்மா, நவீன் பாலிஷெட்டி, மற்றும் பிரதீக் பப்பர்
2019 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய பாலிவுட் படங்களில் ஒன்று, சிசோரே. இத்திரைப்படம், ஒரு நடுத்தர வயதினரான அனிருத், தன் மகன் ராகவ், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) சேரும் கனவு சிதைந்ததால் தற்கொலைக்கு முயற்ச்சிக்க,

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!