Latestஇந்தியாஉலகம்

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஜனவரி 22 திகார் சிறையில் தூக்கு

டெல்லி, ஜன 14 – 7 ஆண்டுகளாக நடைப்பெற்று வரும் நிர்பயா கற்பழித்து கொடுரமாக தாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளான அந்த நால்வருக்கும் எதிர்வரும் ஜனவரி 22ஆம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும். இந்த தண்டனை திகார் சிறைச்சாலையில் நிறைவேற்றப்படும் என உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

ஐவர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு குற்றவாளிகளான அந்த நால்வருடைய சீராய்வு மனு நிராகரித்ததை தொடர்ந்து இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்து அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.
முகேஸ், வினேய் ஷர்மா, அக்‌ஷேய் குமார் சிங்க் மற்ரும் பவன் குப்தா ஆகிய நால்வரும் ஜனவரி 22ஆம் திகதி காலை 7.00 மணிக்கு ஒரே நேரத்தில் தூக்கிலிடப்படுவர். இவர்களுக்கான முன்னோட்ட தூக்குத் தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை கடந்த ஜாயிற்றுக்கிழமை திகார் சிறைச்சாலையில் நடத்தப்பட்டது.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!