Latestஇந்தியாஉலகம்

தமிழ்நாட்டில் வெள்ளம், சுவர் இடிந்து விழுந்ததில் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் மரணம்

கோயம்புத்தூர், டிச 2 – தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்புத்தூரில் அடிமழையால் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 பேர் புதையுண்டு இறந்தனர்.
தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் விடியற்காலை 5.30 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

6 மீட்டர் உயரம் கொண்ட  அச்சுவர் இடிந்ததில் இறந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர்.மழைக்காலங்களில் சுவர் இடிந்து விழுந்து உயிர் சேதங்கள் ஏற்படுவது இந்தியவில் அடிக்கடி நிகழும் ஒரு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மும்பையில் 30 பேர் சுவர் இடிந்து மாண்டுள்ளனர்.

Tags
Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!